பொது மக்களுக்கான ஓர் முக்கிய அறிவித்தல்..

சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்துடன் வட்ஸ்அப் அல்லது வைபர் ஊடாக முறையிடுவதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர் ஊடாக சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படின் இதனூடாக முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்தியநிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 011 288 6179, 011 288 6421 மற்றும் 011 288 6117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிட முடியும்.

மீண்டும் அந்த இலக்கங்கள் 011 288 6179, 011 288 6421 மற்றும் 011 288 6117
இதேவேளை 011 288 6551 மற்றும் 011 288 6552 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் இது தொடர்பில் முறையிட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் 071 916 0000 என்ற வட்ஸ்அப் மற்றும் வைபர் இலக்கத்தினூடாகவும் முறையிடுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் election commission of sri lanka என்ற பேஸ்புக் பக்கதிலும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடாத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திலுள்ள தேர்தல் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திலும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.