கருணாவிற்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஓமல்பே சோபித தேரர் அறிவிப்பு

கருணா அம்மான் முன்வைத்துள்ள கருத்துக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பிரதமர் துரிதமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து நீதிக்காக போராடுவோம் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கருணா அம்மான் என்ற பயங்கரவாதி தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போது தான் 2000 - 3000 இராணுவத்தினரைக் கொன்றதாகவும் அதனால் தனக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றார்.

நாட்டின் பாதுகாப்புபடை வீரர்களைக் கொலை செய்தமையை அவர் பெருமையாகக் கூறுகின்றார்.

வேறு நாடுகளில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருந்தால் அந்நாட்டு பாதுகாப்புபடை வீரர்களை கொன்றதாக எவரேனும் இவ்வாறு பகிரங்கமாகக் கூறியிருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இவ்வாறான கொலையாளிக்கு எதிராக போராடியிருப்பார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வாறான மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய இந்த நபர் சமூகத்தில் உயர்ந்தவர் போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளராகவும் பிரிதொரு கட்சியின் உப தலைவராகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முதன்மை பொறுப்பை வகிக்கின்ற பிரதமரும் ஜனாதிபதியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் யாது ? இவரது இந்த கருத்தினை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொது மக்களுடன் இணைந்து நீதிக்காக போராடுவோம் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.