இலங்கையில் இறுதியாக 40 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : விபரங்கள் இதோ !

இலங்கையில் இறுதியாக நேற்றையதினம் மாத்திரம் 40 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 40 பேரும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட 40 புதிய கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பி தினிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் ஏனைய 29 பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மொத்தமாக 1,991 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,548 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 432 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 54 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.