நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குறித்த 33 பேரும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக காணப்படுவதோடு, 899 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment