இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1500 ஐ கடந்தது

இலங்கையில் இன்றையதினம் மேலும் 28 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களில், 9 பேர் மினுவாங்கொடை வைத்தரியசாலையிலிருந்தும், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை வெலிகந்த ஆதார வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலிருந்து தலா ஐந்து பேரும், 2 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும், காத்தான்குடி வைத்தியசாலை மற்றும் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவரும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,526 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 1,950 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 413 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 25 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.