இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை வரை எந்தவொரு கொவிட்-19 நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க நேற்று மாலை 6 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு நேற்று வெளியிட்ட இரவு 11.30 மணிக்கான கொரோனா நிலவர அறிக்கையில், 10 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் தொற்றுறுதியான 10 பேரில் 9 பேர் கடற்படையினர் என்றும், மற்றும் ஒருவர் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்றைய தினம் 32 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 449 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 337 பேர் கடற்படையினர் என்றும், ஏனையவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் தொற்றுறுதியாகி மருத்துவமனைகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.