இன்று கொரோனாவினால் உயிரிழந்த பெண் முஸ்லிம் சகோதரி, சற்று நேரத்தில் ஜனாஸா தகனம் செய்யப்பட உள்ளது.

இன்று(05) பிற்பகல் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த கொழும்பு 15 மோதரை பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்லிம் சகோதரி என தெரியவந்துள்ளது. 

இவ்வாறு வபாத்தான முஸ்லிம் சகோதரியின் ஜனாஸா சட்ட விதிகளின் படி சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இதனை கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் குறித்த சகோதரியின் 2 பிள்ளைகளும் உலமாக்கள் ஆவர். 

கொரோனாவினால் மரணித்து தகனம் செய்யப்படும் 4 ஆவது ஜனாஸா இதுவென்பதும், தகனம் செய்யப்படும் முதல் முஸ்லிம் சகோதரி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருக்கு மேலான சுவனத்தை கொடுப்பாயாக. அவருடைய கணவருக்கும், பிள்ளைகளுக்கும் மன தைரியத்தை வழங்குவாயாக...!

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.