பாடசாலைகள் திறக்கப்பட்டுவது குறித்து சற்றுமுன் வெளியான செய்தி.


பாடசாலைகள் மீள திறக்கப்படும்போது, பின்பற்றவேண்டிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்று கல்வி அமைச்சினால் நாளை (11) வௌியிடப்படவுள்ளது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்படவுள்ளது.

குறித்த வழிகாட்டல்களின் ஊடாக, தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது, முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து திட்டமொன்றை வகுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டங்களை வகுத்துக்கொள்ளும் முறை தொடர்பில், கல்வி அமைச்சினால் வௌியிடப்படவுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிருமி ஒழிப்பு நடவடிக்கை, மாணவர்களுக்கான குடிநீர் வசதி, வகுப்பறைகளில் மாணவர்கள் அமரவேண்டிய முறை, வகுப்பறைகளில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய விடயங்கள் சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பல்கலைக்கழ கல்விசாரா ஊழியர்களின் பணிகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்கள் நாளை திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை பல்கலைக்கழங்கள் திறக்கப்பட்டாலும் எந்தவொரு கல்வி நடவடிக்கையும் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக விடுதிகளும் திறக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளை பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கிருமி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள கல்விசாரா ஊழியர்கள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகள் கிருமி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் டலஸ் அலகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.