ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது! கைவிரித்தது அரசாங்கம்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனவும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத சிரமமான மட்டத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா என்ற உலக தொற்று நோய் இல்லாத சமயத்தில் அந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. நீங்கள் அனைவரும் நடைமுறையில் இதனை காண்கின்றீர்கள்.உலக வரலாற்றில் இப்படியான சம்பவம் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இது.

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை அதே விதத்தில் நிறைவேற்ற முடியாது. மக்களுக்கு அன்றாடம் சம்பளத்தை வழங்க பொது மக்களிடம் பணத்தை சேரிப்பதில் கூட சிக்கல் இருக்கின்றது.

அரச சேவையை முன்னெடுத்துச் செல்லுதல், பெற்ற கடனுக்கான தவணை மற்றும் வட்டியை செலுத்துதல், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குதல், ஓய்வூதிய கொடுப்பனவு, சமூர்த்தி நிவாரண நிதியை வழங்குதல் என இவை அனைத்தும் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இது எவருடைய பணமும் அல்ல, பொதுமக்களின் பணம். இந்த பணத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வருமானங்களுக்கு கடந்த மாதங்களில் நின்று போயுள்ளனன எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.