நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்


நாட்டில் நேற்றைய தினம்; 13 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 1068 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறுதியாக கொரோனா தொற்றுறுதியான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 7 பேர் கடற்படையினர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவர் குவைத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறதியாகியிருந்தவர்களில் 13 கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்

கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரிய பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கி இருந்த 260 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோவ்வில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டதாக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

30 வயதுக்கும் குறைவான இலங்கை மாணவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இராணுவத்தின் ஊடாக அவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.