நாட்டில் மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு சட்டம்; சற்றுமுன் வெளியான விசேட செய்தி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டு 18 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு மீண்டும் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும் மீண்டும் 18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த 11 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறை எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 08 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி வழமை போல அமுலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.