கம்பளையில் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

கம்பளை இலங்காவத்தை பிரதேசத்தில் வர்த்தகம் நிலையம் ஒன்றின் மீது இன்று (20) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் பெற்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தக நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு குண்டையும் கம்பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அங்கு மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த வர்த்த நிலையத்தைச் நடத்திச் செல்பவரின் வீட்டு மேல் தளத்திலிருந்து வெடிக்காத நிலையில் மேலும் ஒரு பெற்ரோல் குண்டை மீட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவம் இடம் பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.