நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி...!


நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 52 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுறுதியான 52 பேரில் 49 பேரும் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர்கள் திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்கள் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய மூவரில் இரண்டு பேர் ஒருவர் கடற்படையினர் என்றும் ஒருவர் இந்தோனேஸியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தெரிவிக்கபப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றுறுதியான 14 பேர் பூரண குணமடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியான 458 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.