முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை - சஜித் பிரேமதாச

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவையென முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்,

சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அந்த செயற்பாடுகள் அனைத்து மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்,

இந்த செயற்பாடுகள் கௌதம புத்தரின் போதனைகளுக்கு முரணாணது எனவும் அவர் கூறியுள்ளார்,

புத்தரின் போதனைகளுக்கு சிலர் தவறான அர்த்தம் கற்பிக்க முயல்வது தேசத்துரோக செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சமூகங்களிடையே காணப்படும் பிளவுகள் தேசிய நலனுக்கு எதிரானதும் குந்தகம் விளைவிக்க கூடியதுமாகும் என சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்,

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.