நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பி்ல் வெளியான தகவல்


நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவதற்கான வேலைத்திட்டம் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் எதிர்வரும் (27) வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய நேர அட்டவணைக்கு அமைய இந்த வாரம் முதல் தொடருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்துக்கான 19 தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கரையோர தொடருந்து மார்க்கம், பிரதான தொடருந்து மார்க்கம், புத்தளம் தொடருந்து மார்க்கம், வடக்கு தொடருந்து மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து மார்க்கம் என்பனவற்றின் ஊடாக இந்த தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தொடருந்தில் பயணிக்க அனுமதி பெறாத பயணிகள், தங்களின் பணியிட அடையாள அட்டை அல்லது தங்களின் நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட கடிதம், மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் என்பனவற்றை தொடருந்து நிலை அதிபரிடம் சமர்ப்பித்து தொடருந்தில் பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்

எனினும், தொடருந்தில் ஆசனங்கள் வெற்றிடமாக இருந்தால் மாத்திரமே இந்த வாய்ப்பு கிடைக்கும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை, போதுமானளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடுமுழுவதும் சுமார் 5 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொழும்பு - கோட்டை, மருதானை, பம்பலப்பிட்டி மற்றும் தெமட்டகொடை முதலான தொடருந்து நிலையங்களுக்கு அருகில் அதிகளவான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் தொடருந்துகளில் பயணிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே, குறித்த தொடருந்து பயணிகள், தங்களின் பணியிடங்களுக்கு செல்வதற்காக தொடருந்து நிலையங்களுக்கு அருகில் போதியளவு பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கமைய, ஊழியர்கள் எந்தவித அளெகரியங்களுமின்றி பணிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு நாளை முதல் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.