உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா... உலக சுகாதார ஸ்தாபனம் விடுக்கும் எச்சரிக்கை!

புகைப்பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்படுவற்கான வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

குறித்த அறிக்கையிலேயே உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகைப் பிடிப்பவர்களுக்கு உடனடியாக கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

புகைத்தல், நுரையீரல் செயற்பாடுகளை பாதிப்பதன் காரணமாக புகைப்பிடிப்பவர்களின் உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவது கடினமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, புகையிலை அல்லது புகைத்தல், சுவாச நோய்க்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதினால் சுவாச நோய் தீவிரம் அடையும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.