முஸ்லிம்களை எரியூட்டி அச்சமூட்டுகிறார்கள்: பாலித தெவரப்பெரும கடும் விசனம்!

கொரோனா சந்தேகம் என்ற போலிக் காரணத்தை முன் வைத்து முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை மறுத்து இந்த அரசாங்கம் அச்சமூட்டிக் கொண்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும.

நேற்று சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற சட்டன நிகழ்ச்சியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அண்மையில் கொழும்பு 15ல் அநியாயமாக எரிக்கப்பட்ட ரபாய்தீன் என்பவரின் நிலையை மேற்கொள் காட்டி இவ்வாறு தெரிவித்ததுடன், தனது மத நம்பிக்கைப் படி உயிரிழந்த தனது மகனுக்காகவே தான் தினசரி நற்காரியங்களை செய்து வருவதாகவும் அது போல முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கைக்கான உரிமை வழங்கப்பட்டு மதிப்பளிக்கப் பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, இவ்விபரங்களை வெளியிட்டிருந்த பின்னணியில் பாலித தெவரப்பெரும. இந்த அநீதிக்கு எதிராக உறுதியாகத் தமது விசனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.