நாட்டு மக்களுக்கு ஓர் விசேட செய்தி...!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் மாகாண பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அத்துடன் தென் அதிவேகப் பாதையில் பயணிக்கும் பேருந்துகள் கொட்டாவ வரையில் மாத்திரம் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த பேருந்து சேவைகள் மாலை 6 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் பேருந்து நிறுத்தப்படும் இடங்களுக்கு மாத்திரமே இதன்போது கட்டணம் அறவிடப்படும்.

பேருந்துகள் பயணிக்கும் இடத்தின் பெயர் பேருந்தின் முன் கண்ணாடியில் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் பேருந்துகளுக்கான காலாவதியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தும் காலத்தை நீடிப்பதற்கு போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியான பேருந்து அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுளளது.

இதன்படி, 26 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே அமுலாக்கப்படவுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்ட அமுலாகத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கொவிட்-19 பரவரை கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், சமூகத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் இல்லை என்ற உறுதியை வழங்குவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதே வைத்தியர்களின் கருத்தாகவுள்ளது.

கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும், சமூகத்தில் கொவிட்-19 நோயாளர்கள் இல்லை என்று உறுதிப்படுத்த முடியாது என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் ஏதாவது பரிமாற்றங்கள் இடம்பெறும்போது அவற்றுக்கு நியமங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.

அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இடம்பெறம்போது சமூக இடைவெளி, கைகுழுக்குதல் மற்றும் அரவணைத்தல் முதலானவற்றை தவிர்க்க வேண்டும்.

அத்துடன், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.