ராஜித்த சேனாரத்னவின் பிணை இரத்து..

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் விடுத்த உத்தரவை ரத்து செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பிணை உத்தரவில் குறைபாடு காணப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் ராஜித சேனாரத்ன தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதான நீதவானினால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.