நாவலபிடிய பகுதியில் ஒரு கிராமமே நீரில் மூழ்கிய சோகம்

மத்திய மாகாணத்தின் பல இடங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்தால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாவலபிடிய பகுதிகளில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

நாவலபிடிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஜெயசுந்தர கிராமத்தின் பல வீடுகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

இங்குள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக நாவலபிடிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.