இலங்கையில் பரவும் வெட்டுக்கிளிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்

உலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் குருநாகல் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டதை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உறுதிசெய்தது. 

இன்று விவசாய சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ வீரக்கோன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு நேரில சென்று, நிலைமைகளை ஆராய்ந்தனர். 

மாவத்தகம நகரிற்கு அருகிலுள்ள மீபல்லேகம கிராமசேவகர் பிரிவில் பரவலாக வெட்டுக்கிளிகள் காணப்படுகின்ற நிலையில் அங்கு விவசாய நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அந்த பகுதியிலுள்ள தென்னந்தோட்டங்களும் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 

குறித்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஆயிரக்கணக்கில் அவை பெருகி விட்டன. 

இந்த நிலையில் இப்பொழுது அந்தப்பகுதியிலுள்ள அனைத்து விவசாய நிலங்களிலும் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. 

இந்த இனம் தற்போது நம் நாட்டிற்குரிய வெட்டுக்கிளி இனமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்த இனம் தற்போது 3ஆம் கட்ட வளர்ச்சி நிலையில் உள்ளதாகவும், நான்காம் வட்ட வளர்ச்சி நிலையிலேயே இறக்கைகள் வளர்வதாகவும், இந்த கட்டத்தை அடைந்தாலேயே மற்றைய இடங்களிற்கு பரவி பேராபத்தை ஏற்படுததும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் இதன் வளர்ச்சி ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான இரசாயன மருந்துகளின் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாமென்றும் இன்றைய கள விஜயத்தின் முடிவில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இதேவேளை நெல் அறுவடையின் முன்னதாக வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், தவறினால் நெல் அறுவடை பாதிக்கப்படுமென்றும், பொதுமக்களை வெட்டுக்கிளி குறித்து அறிவூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.