ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் செய்ய வேண்டியது என்ன...?


சுகாதார அமைச்சின் கொரோனா ஒழிப்பு செயலணி இன்று முற்பகல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கூடியது.

இந்த ஒன்றுக்கூடலின் போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சமூக இடைவெளியை எவ்வாறு பேண வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மீண்டும் காணப்பட்டால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் அனைத்து சுகாதார பிரிவுகளையும் பலமிக்கதாக மாற்றுவதற்கு வழிமுறை ஒன்றினையும் தயார் செய்யுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கிராமிய மற்றும் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளில் கடமையில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தட்டுபாடின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.