இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று (31) நோர்வூட்டில் இடம்பெறவுள்ளன.
அன்னாரது இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறவுள்ளன.
நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் இன்று மாலை இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் வேவெண்டன் இல்லத்திலிருந்து நேற்று கொட்டகலை CLF வளாகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று பகல் 1.30 மணியளவில் கொட்டகலை CLF வளாகத்திலிருந்து ஹற்றன் – டிக்கோயா வழியாக நோர்வூட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இன்றைய தினம் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment