மக்களே அடுத்த இரண்டு நாட்களுக்கு அவதானம் - காவல்துறை விடுக்கும் செய்தி

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் 900 தற்காலிக காவல்துறை அரண்கள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் குறித்த 23 மாவட்டங்களில் நாளாந்தம் இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 5 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையிலேலயே இவ்வாறு காவல் அரண்கள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னர் போன்றே அனைவரும் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

குழுக்களாக வெளியில் செல்லுதல், குழுக்காள இணைந்து செயற்படுதல் ,மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை பகிர்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன இந்த காலப்பகுதியில் தடை செய்யப்படும்.

இந்த காலப்பகுதியில் புலனாய்வு பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு காவல்துறையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வாகனங்களை சோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.