நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 21 பெயரில் 19 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் துபாயில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 660 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 420 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரத்தில் எந்தவொரு கொவிட் 19 தொற்றாளரும் பொது மக்களிடையே இனம் காணப்படாமை விசேட அம்சமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.