சலூன்களை மீள திறக்க சுகாதார அமைச்சு அனுமதி

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றை மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்,

சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதன் முடி வெட்டுதல் உள்ளிட்ட அத்தியவசிய செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,

உரிய சுகாதார இடைவௌியை பின்பற்றி இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நிபந்தனைகள் அடங்கிய வழிகாட்டல் சுற்றிக்கையொன்று வௌியிடப்படும் என்பதுடன் அதன்பின்னர் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புடன் அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றைத் திறக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது,

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.