மாவட்டங்களுக்கிடையில் பயணங்கள் : பிரதிப்பொலிஸ் மா அதிபர் விடுக்கும் விசேட அறிவிப்பு!

மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் சில நாட்களுக்குள் தீர்மானம் எட்டப்படும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் தெளிவு படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தயார் செய்யப்படுவதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சேவைக்கு திரும்பும் அரச மற்றும் தனியார்துறை அலுவலர்கள் அவர்களின் அலுவலக அடையாள அட்டையினை போக்குவரத்து பொலிஸாரிடம் காண்பிப்பதன் ஊடாக பயண அனுமதியை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சேவைக்கு சமூகமளிக்கும் அரச மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தங்களது நிறுவனங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட சேவை கடிதத்தினை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.