நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி...!

இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியது.

நேற்று மாத்திரம் 137 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 127 பேர் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1319 ஆக உயர்ந்துள்ளர்.

நேற்று தொற்றுறுதியான 137 பேரில் 127 பேர் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும், 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

597 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்றைய தினம் மொத்தமாக 137 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டநிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையான கொவிட்19 நோயாளர்கள் தொற்றுதி செய்யப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி 65 பேருக்கு வைரஸ் தொற்றுறதியாகிருந்தது.

அவர்களில் பெருமளவானோர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.