நாட்டில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்?

நாட்டில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதனால் இந்த நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டில் கடற்படையினர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தோர் ஆகிய இரு குழுக்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்படாவிட்டால், நாட்டில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, புதிய வாழ்க்கை முறைமைக்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பெரும்பாலானோரினால் பின்பற்றப்படுவதில்லை எனவும், இது கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.