இன்று முதல் நாளை வரை இலங்கையின் பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வெப்பநிலை சுட்டியில் தீவிரமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 32 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் அளவான சுட்டெண் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கிழக்கு மாகாணம், வடமேல், வடமத்திய, மேல் மற்றும் தென்மாகாணத்தின் சில இடங்கள், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த வெப்ப அதிகரிப்பு சுட்டெண் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் முதல் நாளை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் வெப்பநிலையின்போது பணியாற்றுபவர்களுக்கு வெப்ப அழுத்தம் உட்பட்ட தாக்கங்கள் ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை மேல், மத்திய, சபரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாவாணங்களில் இன்று (04) மாலை அல்லது இரவு வேளைகளி்ல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம்,மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் இன்று காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தரப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.