ஊரடங்கு தொடர்பான ஜனாதிபதியின் விசேட அறிவிப்புமக்களின் இயல்பு வாழ்க்கைகையும், பொருளாதாரத்தையும் செயற்பாட்டில் வைத்து கோவிட் 19 வைரஸை ஒழிப்பதற்காக துணிச்சலுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கோவிட் – 19 ஜனாதிபதி செயலணியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் நிலைமையிலும் பஞ்ச நிலைமையொன்று ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, முன்னர் இடம்பெற்ற தவறுகளை பாடமாகக் கொண்டு, அவை மீண்டும் இடம்பெறாத வண்ணம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், பேருந்து நிலையங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் மெனிங் சந்தைப் பகுதிகளில் கடமையாற்றுகின்ற பணியாளர்களை அவ்வப்போது பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இவ்வாறான பகுதிகளுக்கு வருகை தருகின்ற நபர்களை அறிவுறுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான வழிகாட்டல் அறிவுறுத்தல்கள், சுகாதார அமைச்சினால் கல்வியமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி நிமித்தம் வெளிநாடு சென்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசா அடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த மூவாயிரத்து 297 பேர் இதுவரை அழைத்துவரப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத மதுபான பயன்பாட்டின் ஊடாக சுகாதார மற்றும் கிராமப்புற வாழ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அதிக விலையில் சட்டவிரோத மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக பாதுகாப்புத் தரப்பு கூறியதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.