வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை


வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலைக்காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.