மீண்டும் தொடர்கிறது ஊரடங்கு உத்தரவு; சற்றுமுன் வெளியான விசேட செய்தி


கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை அதிகாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை தளர்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஏனைய 23 மாவட்டங்களிலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மாத்திரம் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ளபோதே மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் செயற்பாடு நாளை முதல் ஆரம்பமாக உள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த நடவடிக்கைக்காக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.