கொரோனா வைரஸின் தீவிரம்; பாடசாலைகள், பல்கலைக்கழக நடவடிக்கைகள் எப்போது ஆரம்பம்?

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன ஒன்றிணைந்து தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்ந்து அதன்படி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படவில்லை என்றாலும் இணையத்தளம் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையின் அடிப்படையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலின் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.