சிகை அலங்கார நிலையங்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் திறப்பு

ஊரடங்கு உத்தரவு தளர்தப்படும் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, முடி வெட்டுவது தவிர்ந்த ஏனைய முகங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அழகு நிலையங்களை திறப்பதற்கு முன் பிரதேசத்தில் உள்ள சுகாதார சேவைகள் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள www.health.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.