நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி...!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,182 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (25) மாத்திரம் 41 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 41 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 பேரும், டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (24) மாத்திரம் 52 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 52 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 49 பேரும், இரண்டு கடற்படை வீரர்களும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் அடங்கியிருந்தனர்.

இந்நிலையில், மொத்தமாக நாடு திரும்பிய 157 பேரில், குவைத்திலிருந்து வந்த 90 பேருக்கும், டுபாயிலிருந்து வந்த 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,182 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 695 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 477 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 79 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்த பெண்ணுடன் சேர்த்து மொத்தமாக இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.