ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பிய இலங்கை! முழுமையாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்

பொசன் போயா தினத்திற்கு பின் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரமும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமும் ஞாயிற்று கிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்கு சட்டத்தையும் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை ஜுன் மாதம் 4,5ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.