உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஓர் விசேட செய்தி, சற்றுமுன் வெளியான தகவல்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் ஒரு சில பாடங்களுக்கு கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கணக்கீடு, பொறியியல் தொழில்நுட்பம், உயிர் முறைமை தொழில்நுட்பம், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சகைகளின் போது கணிப்பானை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இதன்போது, சிக்கலான கணிப்புகளை மேற்கொள்ளமுடியாத (Non-programmable calculators) சாதாரண கணிப்பான்களையே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும்,பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இலங்கை வரலாற்றில் முதன் முறையாக க.பொ.த. உயர் தர பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சையொன்றில் முதன் முறையாக இதற்கு முன்னர், இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையில் கணிப்பான்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 16, 22, 23 திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, பரீட்சைகள் திணைக்களத்தால் நடாத்தப்படும் இலங்கை கணக்காளர் சேவை - 2017/2018 (2020) தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த / வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.