பொது நிர்வாக அமைச்சு விடுக்கும் விசேட கோரிக்கை

2020 ஆம் ஆண்டுக்கான வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், மதுபான சாலைகள், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள், மாமிச விற்பனை நிலையங்கள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், ஊடகத் துறை அமைச்சின் செயலாளர், புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகள் வெசாக் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.