நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 62 பேருக்கு கொரோனா தொற்றுறதியானது.
அவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்களாவர்.
25 பேர் கடற்படையினராவர்.
இறுதியாக தொற்றுறுதி செய்யப்பட்ட 7 நோயாளர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய 30 பேரில், கட்டாரிலிருந்து வந்த 19 பேர், குவைத்திலிருந்து வந்த 8 பேர், மாலைதீவிலிருந்து வந்த 3 பேர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பியவர்களில் 475 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கடற்படையில் 739 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ள நிலையில், அவர்களில் 388 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில். கொரோனா தொற்றுறுதியானவர்களில் 829 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
781 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment