இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

ஜா எல சுது வெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோய்வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த நபர் ஒருவருக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜா எல சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் வைத்தியசலையில் அனுமதிக்கப்ப்ட குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி சிகிச்சைகளின் பின்னர் வீடுதிரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு p c r பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைனயடுத்து குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோய்வைத்தியசாலையிலி அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.