பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது குறித்து விசேட அறிவிப்பு : சற்றுமுன்னர் வெளியான செய்தி!



நாளைய தினம் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது

போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்களினதும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகளை நாளை முதல் பகுதியளவில் வழமைக்குக் கொண்டுவர அரசாங்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டாம் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறையினர், முகக் கவசங்கைளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பேண வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.