நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள 7 முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இன்று முதல் இயல்வு வாழ்க்கைக்கு மக்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதி பொலிஸ் மா அதிபரினால் 7 முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இன்று முதல், பணிக்கு செல்பவர்கள்,  அவர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை, ஆவணங்கள், வட்ஸ்அப் செய்தி அல்லது குறுந்தகவல் செய்திகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என தெரிவித்தார்.

தங்கள் சொந்த வாகனங்களில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் பணியிடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி பணியில் இருந்து வீடு திரும்பும் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறை ஊழியர்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் வீடு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில் வேலைக்கு பயணிக்க பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்று முதல் பணியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாராந்த மற்றும் நாளாந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன  இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க அடிப்படையிலான கட்டமைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.