இலங்கையில் 7 வயது சிறுவனுக்கு கொரோனா - நேற்றைய நோயாளிகள் தொடர்பான தகவல்

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.