தனது 5 வயது மகனுக்கும் பியர் அருந்தச் செய்த தந்தை கைது: நாவலப்பிட்டியில் சம்பவம்

தனது ஐந்து வயது மகனுக்கு பலவந்தமாக பியரினை பருக்கி மன அழுத்தத்துக்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடுகஞ்சேனை தோட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவதினம் சந்தேக நபர் தனது நண்பர்கள் சிலருடன் ஆற்றங்கரையில் உள்ள ஒரு கற்பாறை மீது அமர்ந்தவாறு மது அருந்துவதனையும் பின்னர் தனது அருகிலிருந்த 5 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக பியரைச் அருந்தச் செய்யும் காட்சிகளை அருகிலிருந்த இளைஞர் ஒருவர் தனது கைத்தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது

இதன்போது மேற்படி வீடியோ பதிவுகள் குறித்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அரேந்திர கலுகம்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டு வந்ததனையடுத்து அவரின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.