மே மாதத்திற்கான 5 ஆயிரம் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய செய்தி..


மே மாதத்திற்கான 5 ஆயிரம் கொடுப்பனவு செலுத்தும் நடவடிக்கை இந்த மாதம் 11ஆம்திகதி ஆரம்பமாக உள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 5ஆயிரம் கொடுப்பனவுகளை இந்த மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம்திகதி வரை வீடுகளுக்கு சென்று கையளிக்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கே 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திட்டத்தின் ஊடாக இந்த மாதம் 6 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக முதியோர்களுக்கானதேசிய செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதவேளை, அனைத்து ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளன.

பொருளாதார மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுத்துள்ளது ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்குமான ஓய்வூதியம் மாதாந்தம்10ஆம் திகதி வழமையாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், வெசாக் தினம் மற்றும் எதிர்வரும்10 ஆம் திகதி வார இறுதி நாள் என்ற காரணத்திங்களினால், இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இன்றும் நாளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.