இலங்கையில் நேற்று (27) கொரோனா தொற்றுக்குள்ளான 150 பேர் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 150 தொற்றாளர்களில் 97 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்றும் ஏனைய 53 பேரும் கடற்படையினர் என்றும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்றுவரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது, தொற்றுக்குள்ளான 727 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் 732 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதுடன் 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment