தீயில் சிக்கி தந்தையும் மகளும் பலி : பலாங்கொடையில் சம்பவம்..!

பலாங்கொடை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

பலாங்கொடை கல்கொடை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பலாங்கொடை பொலிஸார் மற்றும் பிரதேச பொதுமக்களின் ஒத்தழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் உட்பட 19 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.