இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம்


இலங்கையில் கோவிட்-19 ஆள் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்புக்கு காரணம், 206 ஆவது நோயாளி.

ஏப்ரல் 05 ஆம் திகதி ஜா-எல சுதுவெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திருட முயன்றபோது 206 ஆவது நோயாளி பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்பைடைக்கப்பட்டார். 

பரிசோதனைகளிற்கு பின்பு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதே சுடுவெல்லா பகுதியில் நிவாரணப் பணிகளிள் ஈடுபட்டு இருந்த கடற்படை வீரர்கள் பலரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்த கடற்படை அதிகாரிகள் வெலிசரா கடற்படை முகாமில் தங்கி இருந்ததால், வெலிசரா கடற்படை முகாமில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

தென்கொரியாவில் 31 வது கோவிட் 19 நோயாளி (Patient 31) அடையாளம் காணப்பட்டதன் பின்பே அந்நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

அந்த 61 வயது பெண், 9000 பேர் கலந்துகொண்ட மத வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார், அத்துடன் சுமார் 3000 பேருக்கு அவர் கொரோனாவை பரப்பினார் என்றும் தெரிவிக்க படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.