கவலை வேண்டாம் - மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கால நீடிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த பெப்ரவரி மாதம் முதல் நுகர்வோருக்கு மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மின்சார கட்டணம் செலுத்தப்படாவிடினும் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.